Powered by Blogger.
எதிர்பார்ப்புகள் அனைத்தையும் விட்டு
வாழக் கற்றுக்கொள்கிறேன்
எத்தனையோ ஏமாற்றங்களை
சந்தித்து கடந்து வந்த 
இந்த நொடி முதல். 

Tamil Motivational Quotes
Tamil Motivational Quotes

​வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.

தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் என்ற AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.​

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின்உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 

உலகம் முழுவதும் சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. மக்களும் அரசுகளும் இதில் சற்று தயக்கம் காட்டுவதற்கு காரணம்.. சோலார் பேனல்கள் அமைப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவு. வருங்காலத்தில் சோலார் பேனலுக்கு அதிகம் செலவிட அவசியம் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பஃபல்லோ பல்கலைக்கழக எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கியாவ்கியாங் கான் கூறியதாவது: ஒளி ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் பெற்ற சோலார் செல்களின் தொகுப்புதான் சோலார் பேனல் எனப்படுகிறது. 

பொதுவாக பாலி கிரிஸ்டலைன் சிலிகானை கொண்டுதான் இந்த பேனல் உருவாக்கப்படுகிறது. மெலிதான பிலிம் போல பேனலை தயாரிப்பதென்றால் அமார்பஸ் சிலிகான் அல்லது காட்மியம் டெல்யூரைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு வகையுமே அதிக செலவு ஏற்படுத்தக் கூடியவை. குறைந்த செலவிலான சோலார் பேனல்களை உருவாக்கும் முயற்சி உலகம் முழுக்க நடக்கிறது. அந்த வகையில் பிளாஸ்மோனிக் தன்மை கொண்ட ஆர்கானிக் வகை பொருட்களை சோலார் பேனலாக பயன்படுத்தினால் அதிக மின்உற்பத்தி செய்ய முடியும். செலவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும், இது திரவ வடிவில் இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது. திரவ வடிவில் இருக்கும் சோலார் பேனலை சுவர், தரை என எந்த பகுதியிலும் பெயின்ட் போல எளிதில் பூச முடியும். வெளிச்சம் கிடைக்கும் எல்லா இடத்திலும் இந்த பெயின்ட் அடித்தால் மின்உற்பத்தியும் அதிகளவில் நடக்கும். இது மட்டுமின்றி கார்பனை அடிப்படையாக கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிலிம் வகை சோலார் பேனல் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இவற்றையும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். இவ்வாறு கியாவ்கியாங் கான் கூறினார்.
சென்னை மருத்துவ மருந்தியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பேராசிரியர் டாக்டர் கே.விஜயசாரதி. இவர், மந்தைவெளி மார்க்கெட் அருகில் கே.கே.ஆர் மருத்துவமனையை நிறுவி கடந்த 12 ஆண்டுகளாக அனைத்து புற்று நோய்க்கும் சிகிச்சை அளித்து வருகிறார்

இவர் கூறியதாவது:- 

நெருப்பை போன்றது புற்றுநோய். உடலில் ஒரு பாகத்தில் ஆரம்பித்து அதன் கோடிக்கணக்கான விதைகள் ரத்தம் மூலம் மூளை, இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரலுக்கு சென்று தங்கி வளரும். 
ஆரம்பித்த பாகத்தில் ரேடியோ தெரபியோ அல்லது அறுவை சிகிச்சை செய்தாலும் நோய் குணமாவதில்லை. பெரும்பாலோருக்கு சில மாதங்களிலேயே அத்தியாவசிய பாகங்களுக்கு பரவி உயிரை பறித்து விடுகிறது. 

இன்று பெரும்பாலான புற்றுநோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை சரியான கலவையில் நரம்பு வழியாக ரத்தத்தில் செலுத்தினால் சி.டி., எம் ஆர்.ஐ, பிஇடி ஸ்கேனுக்கு தெரியாமல் பரவியுள்ள புற்றுநோய் விதைகள் அழிவதுடன் முதலில் வந்த பெரிய கட்டியும் சுருங்கி சக்கை ஆகிவிடும். 

மேலும் தேவையெனில் சிறிய அறுவை சிகிச்சை அல்லது ரேடியோ தெரபியோ செய்யலாம். இத்தகைய நவீன மருந்து சிகிச்சையிலும் மார்பக புற்று, மூச்சுக்குழாய், உணவு குழாய், கர்ப்பப்பை, நாக்கு, ஆண் குறி, நுரையீரல், மலப்பை புற்று மற்றும் குழந்தைகள் புற்றுநோய்க்கு ஆபரேஷன் செய்யாமல் சிகிச்சை அளிக்கலாம். 

எய்ட்ஸ் நோயில் பிழைத்தவரில் பலருக்கு சில ஆண்டுகளில் புற்றுநோய் வருகிறது. புற்றுநோயாளிகள் சிலருக்கு எய்ட்ஸ் இருக்கிறது. சமீபத்திய நவீன சிகிச்சை முறைகளில் எய்ட்ஸ் + புற்றுநோய் நோயாளிகளுக்கும் நல்ல வைத்தியம் செய்யலாம் என்றார். 

மேலும் விவரங்களுக்கு 98840 57000/93806 57000/04442067705 என்ற எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது.

உடல் எடையை குறைக்க பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆனால், அதற்கெல்லாம் மேலாக நீண்ட நேரம் தூங்குவதே உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சிறந்த மருந்து என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.     
அதன்படி, 14 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினர் இரவில் தினமும் 10 மணிநேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது. 

அதே நேரத்தில் அதிக உடல் எடை இருந்தாலும் தானாக குறைந்து விடும் என தெரியவந்தது.
அண்மையில் கூகுள் தன் ஜிமெயில் தளத்தில், புதிய கூடுதல் வசதிகளை அளித்துள்ளது. தற்போதைக்கு சோதனை ஓட்டத்தில் கிடைக்கும் இவை, விரைவில் செம்மைப் படுத்தப்பட்டு நமக்கு முழுமையாக இன்னும் சில வசதிகளுடன் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம்.
ஜிமெயில் பயன்படுத்துபவர்கள், தங்கள் தளம் சென்றவுடன், புதிய இமெயில் செய்தி அனுப்பும் வகையில் Compose அழுத்தவும். கிடைக்கும் தளத்தில், மெசேஜ் பாக்ஸில் To கட்டத்திற்குச் சற்று மேலாக, Try out the new compose experience என்று ஒரு புதிய செய்தியைப் பார்க்கலாம். இங்கு கிளிக் செய்தால் புதிய வகை செய்தி தயாரிக்கும் கட்டத்திற்கு எப்போதும் செல்லலாம் என்றும் ஒரு விளக்கம் கிடைக்கும். இதில் கிளிக் செய்தவுடன், மீண்டும் உங்கள் ஜிமெயில் தளம்
புதியதாக எழுந்து வரும். அங்கே, New Message என்ற புதிய கட்டத்தினை ஒரு ஓரமாகப் பார்க்கலாம்.
இதில் நீங்கள் பெறுபவரின் பெயரை டைப் செய்த தொடங்கியவுடன், அந்த எழுத்தில் உள்ள அனைவரின் முகவரிகளும் வரிசையாகக் கிடைக்கும். இதில் என்ன புதிய வசதி என்கிறீர்களா? உங்கள் ஜிமெயில் நண்பர்கள், ஏதேனும் படத்தைப் பதிந்திருந்தால், போட்டோவினைப் பதிவு செய்திருந்தால், அவையும் காட்டப்படும். இதனால், இரண்டு கிருஷ்ணன் இருந்தால், அவர்களின் போட்டோவினை அடையாளம் வைத்து, சரியான முகவரியைக் கிளிக் செய்திடலாம். இந்த வசதி, CC மற்றும் BCC ஆகியவற்றிற்கும் தரப்படுகிறது. இதனால், தவறான நபர்களுக்கு அனுப்ப மாட்டோம்; விரைவாகவும் அஞ்சல் முகவரியினை அமைக்கலாம். மேலும், வரிசையாகக் காட்டப்படும் முகவரியில், நமக்கு வேண்டியதை மவுஸ் கர்சர் மூலம் இழுத்து வந்து, முகவரிக்கான கட்டத்தில் விட்டுவிடலாம்.
மேலும், மெசேஜ் பார்மட் செய்வதற்கு A என்ற ஐகானில் கிளிக் செய்து பார்மட்டிங் டூல்ஸ்களைப் பெறலாம். எழுத்து அளவு மாற்றல், போல்ட், அடிக்கோடு, புல்லட் என அனைத்து வசதிகளையும் இதில் பயன்படுத்தலாம். ஜெம் கிளிப் ஐகானில் கிளிக் செய்து, பைல்களை இணைக்கலாம். + ஐகானில் கிளிக் செய்து, மெசேஜ் எழுதும் பக்கத்திலேயே படங்களை, போட்டோக்களைப் பதியலாம்.
இதே போல ரிப்ளை, பார்வேர்டிங் போன்ற வசதிகளுக்கும் வழிகள் காட்டப்பட்டுள்ளன. விரைவில் எமோடிகான் இணைப்பு, இன்விடேஷன், லேபில், மெசேஜ் படித்ததற்கான ஒப்புதல் அனுப்பும் வழி ஆகியவை இணைக்கப்படவுள்ளன.
மேலே காட்டிய வசதிகள் மட்டுமின்றி, ஒரே நேரத்தில் வெவ்வேறு மெயில்களைத் திறந்து பதில் அனுப்பும் வசதியும் தரப்பட்டுள்ளது. சர்ச் ஆப்ஷனும் இயக்க முடியும். முன்பு, வேறு ஒரு மெயில் செய்தியிலிருந்து, வரிகளை எடுத்து காட்ட அல்லது படித்து எழுத வேண்டும் எனில், எழுதிக் கொண்டிருப்பதை சேவ் செய்துவிட்டு, பின் பழைய மெயிலைத் தேடிப் பிடித்துப் படித்து, பின் மீண்டும் சேவ் செய்த மெசேஜைத் திறந்து அமைக்க வேண்டும். இப்போது அது தேவையில்லை. ஒரே விண்டோவிலேயே, புதிய செய்தி, பழைய செய்தி தேடல், பார்த்தல் என அனைத்தையும் மேற்கொள்ளலாம்.
சரி, இதிலிருந்து விடுபட்டு பழையபடியான அஞ்சல் அனுப்பும் வழக்கமான கட்டத்திற்குச் செல்ல வேண்டுமானால் என்ன செய்திட வேண்டும்? மெசேஜ் கட்டத்தில், கீழாக வலது புறத்தில் உள்ள ஐகானக் கிளிக் செய்திட வேண்டும். ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கும். இதில் மேலாக, "Switch Back to Old Compose" என்று இருப்பதில் கிளிக் செய்தால், மீண்டும் உங்கள் ஜிமெயில் தளம் புதியதாகக் கிடைக்கும்.
இந்த புதிய வசதியை, ஜிமெயில் பயன்படுத்தும் அனைவருக்கும் கிடைக்கிறது. ஆனால், எத்தனை பேர் பார்த்துப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அட! ஆமா!! பார்க்கவே இல்லையே எனப் பலர் வியப்பது எனக்குத் தெரிகிறது. இனிமேலாவது பார்த்து பயன்படுத்துங்களேன்!
மொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும்.

கூடுமானவரை, மொபைல் போனை உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.

போனைப் பயன்படுத்துகையில், தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும்.

மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ளதா? பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.

குரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதனைத் தவிர்க்கவும்.

இயலும்போது, டெக்ஸ்ட் வழியாகத் தகவலை அனுப்பவும்.

பேசுவதனைத் தவிர்க்கவும்.

இரவில் தூங்கும்போது, படுக்கையில் உங்கள் தலை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம்.

 பயன்படுத்தும் அல்லது வாங்கப் போகும் போனின், கதிர்வீச்சு எந்த அளவில் இருக்கும் என்பதனைப் பார்க்கவும். கதிர்வீச்சு அளவு தெரியாத போனைப் பயன்படுத்த வேண்டாம். ஆபத்து அளவிற்குள்ளாக உள்ள போனை மட்டுமே பயன்படுத்தவும்.

உங்கள் அருகே லேண்ட் லைன் போன் உள்ளதா? மொபைல் போனுக்குப் பதிலாக அதனையே பயன்படுத்தவும்.

உங்கள் கேசம் ஈரமாக இருக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். மெட்டல் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியினை அணிந்திருந்தால், மொபைல் போனைச் சற்றுத் தள்ளி வைத்தே பயன்படுத்தவும். ஏனென்றால், ஈரம், மெட்டல் ஆகியவை ரேடியோ அலைகளை மிக எளிதாகக் கடத்தும் தன்மை பெற்றவை.

குழந்தைகள் மொபைல் போனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தரக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், வெகுநேரம் பயன்படுத்தக் கூடாது. அவர்களின் உடல் எலும்புகள், மிக மிருதுவாக இருப்பதால், கதிர்வீச்சினை வெகுவாக ஈர்த்துக் கொள்ளும். எனவே அவர்கள் போன் பயன்படுத்துவது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

நண்டு மிளகு சூப் தேவையான பொருட்கள்:

பெரிய நண்டு -1

மிளகு - 2 டீஸ்பூன்

சீரகத்தூள் -1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

இஞ்சி -சிறுதுண்டு

எண்ணெய் -1 டீஸ்பூன்

பிரியாணி இலை -1

எலுமிச்சம்பழச்சாறு - 1 டீஸ்பூன்

லவங்கம் -1

கறிவேப்பிலை -சிறிதளவு

உப்பு -தேவைக்கேற்ப

நண்டு மிளகு சூப்

மிளகை தூளாக்கி சீரகத்தூளுடன் சேர்க்கவும். இஞ்சியை விழுதாக்கவும். இவற்றுடன் சிறிது உப்புசேர்த்து சுத்தம் செய்த நண்டில் தடவி, 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், லவங்கம், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

மசால் தடவிய நண்டை சேர்த்து நன்கு வதக்கவும். போதுமான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இதன் பிறகு எலுமிச்சம்பழச் சாறை சேர்த்து உப்பு சரிபார்த்து நண்டு மிளகு சூப் சூடாக பரிமாறவும்.

கரகர பட்டன்ஸ்

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் (மூன்றையும் சேர்த்துக் கலந்து வேக வைக்கவும்), மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, வேக வைத்த பருப்பு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தண்ணீர் தெளித்து கெட்டியாக மாவு போல் பிசையவும். மாவை வெள்ளைத் துணியில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு, கட்டை விரலால் உருண்டையை அழுத்திவிடவும். இது பட்டன் போல இருக்கும். எண்ணெயை சூடாக்கி இந்த பட்டன்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

மசாலா மோர்

தேவையானவை: தயிர் - 500 மில்லி, கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - 2 இஞ்ச் நீள துண்டு, பச்சை மிளகாய் - 1 அல்லது 2, மினரல் வாட்டர் - ஒரு லிட்டர், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். தயிரில் மினரல் வாட்டர் விட்டு கடைந்து மோராக்கவும். இந்த மோரில், அரைத்த விழுதை சேர்த்துக் கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு, வடிகட்டி எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: வெயில் காலத்தில் வீட்டுக்கு  வரும் விருந்தினர்களை இந்த  மசாலா மோர் கொடுத்து உபசரிக்கலாம். இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் கொடுக்கலாம்.

 மசாலா வேர்க்கடலை

தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், மிளகாய்த்தூள்- கால் டீஸ்பூன், எண்ணெய் - டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடலை மாவு - 2 டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை போட்டு, ஒரு கை தண்ணீர் தெளித்துப் பிசிறி வடிகட்டவும். உப்பு, எண்ணெய், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து பிசிறினாற் போல கலக்கவும். கலவையை பேப்பர் தட்டில் பரவலாக வைத்து 'மைக்ரோவேவ் அவன்' உள்ளே 2 நிமிடம் வைத்து எடுத்து, கலந்து ஆறவிட்டால்... மசாலா வேர்க்கடலை தயார்!

குறிப்பு: 'மைக்ரோவேவ் அவன்' இல்லாதவர்கள் வேர்க்கடலை கலவையை, எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

 மேங்கோ மில்க் ஷேக்

தேவையானவை: மாம்பழத் துண்டுகள் (தோல் நீக்கியது) - ஒன்றரை கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை -  கால் கப்.

செய்முறை: பாலில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு காய்ச்சி இறக்கி, ஆற வைக்கவும். மாம்பழத்தை  மிக்ஸியில் (கூழ் போல்) அரைத்து எடுக்கவும். மாம்பழ விழுதை பாலில் விட்டு நன்கு கலக்கவும். அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து, குளிரவிட்டு பரிமாறவும்.

 கொத்தவரங்காய் பருப்பு உசிலி

தேவையானவை: கொத்தவரங்காய் - 100 கிராம், கடலைப்பருப்பு - அரை கப், மிளகாய் வற்றல் - 5, கடுகு -  ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன், கறிவேப்பிலை- சிறிதளவு, மஞ்சள்தூள் -  ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி, வேக வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை 30 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து... கறிவேப்பிலை, பருப்பு விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கிளறவும். பருப்பு கலவை வெந்ததும், வேகவைத்த கொத்தவரங்காய் துண்டுகளை சேர்த்துக் கலந்து, சூடுபட கிளறி இறக்கவும்.

குறிப்பு: பீன்ஸிலும் இதே முறையில் பருப்பு உசிலி தயாரிக்கலாம்.

 வீட் ரவா  பைனாப்பிள் அல்வா

தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், பைனாப்பிள் விழுது, சர்க்கரை - தலா ஒன்றரை கப், வறுத்த முந்திரி துண்டுகள் - 15, குங்குமப்பூ - 4 அல்லது 5 இதழ்கள், நெய் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடாயில் நெய் விட்டு, சூடானதும் கோதுமை ரவையை சேர்த்து சூடுபட கிளறவும். பிறகு, ரவை மூழ்கும் அளவுக்கு சுடு நீர் விட்டு கிளறவும். கெட்டியாகி வந்ததும் சர்க்கரை, பைனாப்பிள் விழுது, சேர்த்துக் கிளறவும். பிறகு, குங்குமப்பூ சேர்க்கவும். இறுகி கெட்டியாக வந்ததும் முந்திரி துண்டுகள் போட்டு நன்கு கிளறி இறக்கவும். இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு: கிளறும் கரண்டியில் எடுத்தால் தானாக 'தொப்'பென்று விழ வேண்டும். இதுதான் சரியான அல்வா பதம்.

 சப்போட்டா மில்க்ஷேக்

தேவையானவை: சப்போட்டா பழம் - 4, பால் (காய்ச்சியது) - ஒரு லிட்டர், சர்க்கரை - கால் கப்.

செய்முறை: சப்போட்டா பழங்களை 'கட்' செய்து உள்ளிருக்கும் விதையை நீக்கிவிட்டு, ஸ்பூனால் சதைப்பற்றை மட்டும் எடுக்கவும். அதை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை சேர்த்து, சிறிது பால் விட்டு அரைக்கவும். நன்கு மசிந்ததும் மீதமுள்ள பாலை மிக்ஸியில் விட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... சப்போட்டா மில்க் ஷேக் தயார்!

 புடலங்காய் சிப்ஸ்

தேவையானவை: விதை, பஞ்சு நீக்கிய புடலங்காய் துண்டுகள் - ஒரு கப், கடலை மாவு - 4 டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு  - தேவையானஅளவு.

செய்முறை: புடலங்காய் துண்டுகளை வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, அதில் புடலங்காய் துண்டுகளைப் போட்டு கலந்து கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி புடலங்காய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

 பூசணிக்காய் ரசவாங்கி

தேவையானவை: பூசணிக்காய் துண்டுகள் - ஒரு கப், புளி - சிறிய எலுமிச்சம்பழம் அளவு, மிளகாய் வற்றல் - 3 அல்லது 4, கடலைப் பருப்பு, தனியா, தேங்காய் துருவல் - தலா 2 டீஸ்பூன், பெருங் காயத்தூள் - கால் டீஸ்பூன், வேக வைத்த மொச்சைக் கடலை - கால் கப், வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப்,  எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை உப்பு சேர்த்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, அரைத்துக் கொள்ளவும். கடாயில் புளிக் கரைசல், அரைத்த விழுது, பூசணிக்காய் துண்டுகள் சேர்த்து கொதிக்கவிடவும். பூசணிக்காய் வெந்ததும் வேக வைத்த மொச்சைக் கடலை, துவரம்பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு சேர்ந்தாற் போல வந்ததும், கீழே இறக்கவும்.  கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை தாளித்து இதில் சேர்த்துக் கலக்கினால்... பூசணிக்காய் ரசவாங்கி தயார்.

 ஆலு  பனீர் சாட்

தேவையானவை: சிறிய பனீர் துண்டுகள் - அரை கப், சிறிய உருளைக்கிழங்கு துண்டுகள் (வேக வைத்தது) - அரை கப், வெங்காயம் - ஒன்று, பட்டாணி, கேரட் துண்டுகள் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, எலுமிச்சைச் சாறு -  ஒரு டீஸ்பூன், அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை, சாட் மசாலா பவுடர் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண் ணெய் விட்டு, சூடானதும் பனீர் துண்டுகளை போட்டு வதக்கி, லேசான பிரவுன் கலர் வரும் வரை சூடுபட கிளறி எடுக்கவும். உருளைக்கிழங்கு துண்டுகளையும் வதக்கி எடுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... நறுக்கிய வெங்காயம், பட்டாணி, கேரட் துண்டுகள், இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, அஜினமோட்டோ சேர்த்துக் கிளறவும். எல்லா காய்களும் வெந்ததும் பனீர், உருளைக்கிழங்கு துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து  இறக்கிவிடவும். கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

 சாத பக்கோடா

தேவையானவை: சாதம் - ஒரு கப், கடலை மாவு - 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் -  ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சாதத்தை மசித்துக் கொள்ளவும். அதனுடன் கடலை மாவு வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை  சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண் ணெயை சூடாக்கி, சாதக் கலவையில் இருந்து சிறிது, சிறிதாக  கிள்ளி எடுத்து எண்ணெயில் போடவும். (உருட்டி போடக் கூடாது). வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடித்து அரித்து எடுக்கவும்.

குறிப்பு: கரகர என்று டேஸ்ட்டாக இருக்கும் இந்த பக்கோடாவை, மிகக் குறைவான நேரத்தில் செய்துவிடலாம்.

 பேபி பொட்டேடோ மசாலா ரோஸ்ட்

தேவையானவை: பேபி பொட்டேடோ (சின்ன உருளைக்கிழங்கு) - 250 கிராம், வெங்காயம் - 2, பூண்டு - 4 பல், பிரிஞ்சி இலை - 1, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன்,  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேபி பொட்டேடோவை வேக வைத்து, தோல் நீக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு தாளித்து... வெங்காய துண்டுகள், நசுக்கிய பூண்டு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, வேக வைத்த உருளைக்கிழங்கு போட்டு கிளறவும். டிரை ரோஸ்ட் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

 பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல்

தேவையானவை: கத்திரிக்காய் - 6, தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் -  கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நீளவாட்டில் 'கட்' செய்து தண்ணீரில் போடவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பை வறுக்கவும். ஆறியதும்... தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங் காயத்தூள் ஆகியவற்றை வறுக்கவும். கத்திரிக்காயை எடுத்து அதில் போடவும். உப்பு சேர்த்துக் கலந்து சூடுபட கிளறவும். வெந்து வரும் சமயம் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் - கடலைப்பருப்பு - தனியா பொடியைத் தூவி கிளறவும்.  தீயை நிறுத்திவிட்டு, ஒரு நிமிடம் கழித்து மீண்டும் கலந்து பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.  

குறிப்பு:  பொடியை தூவும் போது, அரை கப் வேக வைத்த காராமணி சேர்த்தும் இதனை செய்யலாம்.

 வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - ஒன்று (வேக வைக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய் வற்றல் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்த வாழைக்காயை தோல் நீக்கி, கேரட் சீவும் சீவியில் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கிள்ளிய மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை  சேர்த்துக் கிளறவும். துருவிய வாழைக்காய், உப்பு இரண்டையும் சேர்த்து. கரண்டி காம்பினால் கலக்கி, நன்கு கலந்ததும் இறக்கி னால்... வாழைக்காய் பொடிமாஸ் தயார்!

 கதம்ப சாதம்

தேவையானவை: சாதம் - 2 கப், புளி - எலுமிச்சம்பழ அளவு, தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, மிக்ஸட் காய்கறி துண்டுகள் (உருளைகிழங்கும் சேர்க்கலாம்) - 2 கப், மிளகாய் வற்றல் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, துவரம்பருப்பு (வேக வைத்தது) - அரை கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - சிறிதளவு - கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து, அரைத்துக் கொள்ளவும். புளியுடன் உப்பு சேர்த்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். இதில் புளிக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும். பச்சை வாசனை போக கொதித்ததும், அரைத்த விழுது, வேக வைத்த காய்கறி - கிழங்கு துண்டுகள் சேர்த்து கொதிக்கவிட்டு, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கலக்கவும். நன்கு சேர்ந்தாற் போல வந்ததும் கறிவேப்பிலையைக் கிள்ளி போடவும். சாதத்தில் நெய்விட்டு மசித்து, காய்கறி கலவையை விட்டு கலக்கினால்... கதம்ப சாதம் தயார்.

குறிப்பு: இதற்கு அப்பளம், சிப்ஸ் சரியான  சைட் டிஷ்.

 வெந்தய மாங்காய்

தேவையானவை: மாங்காய் - ஒன்று, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் -  ஒரு துண்டு, மிளகாய் வற்றல் - 4, பெருங்காயம் - சிறு துண்டு, கடுகு -  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாங்காயைப் பொடியான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், வெந்தயம், மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து பொடி செய்யவும். மாங்காயில் உப்பு, வறுத்துப் பொடித்த பொடி சேர்த்துக் கலக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை கடாயில் விட்டு, சூடானதும் கடுகு தாளித்து, மாங்காய் கலவையில் சேர்த்து, கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். 5 நிமிடம் ஊறிய பின் பரிமாறலாம்.

குறிப்பு: இதன் சுவையும், மணமும் அபாரமாக இருக்கும். தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிட... நிறைவான திருப்தி கிடைக்கும்.

 பனீர் 65

தேவையானவை: பனீர் துண்டுகள் - 15 அல்லது 20, இஞ்சி -  பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, சில்லி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், மைதா - கால் கப், சோள மாவு - 4 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பனீர் துண்டுகள், இஞ்சி - பூண்டு விழுது எலுமிச்சைச் சாறு, சில்லி சாஸ், உப்பு சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். மைதா, சோள மாவு, உப்பை சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பனீர் துண்டுகளை மைதா கலவையில் புரட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பனீர் துண்டுகளைப் போட்டு வெந்ததும் திருப்பிவிட்டு, பொன்னிறம் ஆனதும் எடுத்து எண்ணெயை வடிக்கவும். பனீர் துண்டுகளை தட்டில் வைத்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்பு: தக்காளி சாஸ், சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

 பிரெட் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்- 6, வெண்ணெய் - 2 டீஸ்பூன், நூடுல்ஸ் (வெந்தது) - அரை கப், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - இஞ்சி துண்டுகள் - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு  (வேக வைத்தது) - 2, தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண் ணெயை சேர்த்து, உருகியதும்... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் - இஞ்சி துண்டுகள், உப்பு சேர்த்துக் கிளறவும். வெங்காயம் வெந்ததும் நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு,  தக்காளி சாஸ், கொத்தமல்லி இலை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையில்  2 டீஸ்பூன் எடுத்து, ஒரு பிரெட் ஸ்லைஸ் மீது பரவலாக வைக்கவும். மற்றொரு பிரெட் ஸ்லைசை மேலே வைத்து லேசாக அழுத்திவிட்டு பரிமாறலாம்.  

குறிப்பு: மிகக் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய இந்த சாண்ட்விச், பிரேக்ஃபாஸ்ட் தயாரிக்கும் டென்ஷனைக் குறைக்கும்.

 கத்திரிக்காய்  முருங்கைக்காய்  பட்டாணி பொரியல்

தேவையானவை: கத்திரிக்காய் - 6, முருங்கைக்காய் - 1, பச்சைப் பட்டாணி - ஒரு கப், பெரிய வெங்காயம் -  ஒன்று, தக்காளி - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு தாளிக்கவும். வெங்காய துண்டுகள், கத்திரிக்காய் துண்டுகள், முருங்கைக்காய் துண்டுகள், பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். நன்கு சூடுபட வதங்கி வரும்போது தக்காளி துண்டுகள், கால் கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். காய்கள் வெந்து வந்ததும் (தண்ணீர் வற்றியதும்) தேங்காய் துருவல் தூவி கலந்து எடுக்கவும்.

 ஓமப்பொடி ராய்த்தா

தேவையானவை: ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - ஒரு கப், தயிர் - 2 கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஓமப்பொடியை கையினால் நொறுக்கி போடவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலை ஆகியவற்றை கிள்ளிப் போடவும். இதனுடன் உப்பு, தயிர் சேர்த்துக் கலக்கினால்... ஓமப்பொடி ராய்த்தா தயார்.

 கார்ன் சூப்

தேவையானவை: இளம் சோளம் - ஒரு கப், சோள மாவு - 2 டீஸ்பூன், காய்கறி துண்டுகள் - ஒரு கப், பச்சை மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை, சீஸ் துருவல் - சிறிதளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் காய்கறி துண்டுகள், சோளம், பச்சை மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். அஜினமோட்டோ, சோள மாவு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டினால்... கார்ன் சூப் ரெடி! சூப்பை ஒரு கப்பில் விட்டு மிளகுத்தூள், சீஸ் துருவல் தூவி சாப்பிடக் கொடுக்கவும்.

குறிப்பு: இது, சத்து மிக்கது... சுவையானது.  

 வெஜ் புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம் - 2, நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பச்சைப் பட்டாணி கலவை -  ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, தக்காளி - 2, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - 1, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,  தயிர் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை வறுக்கவும். அதில் வெங்காய துண்டுகள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வெந்து வந்ததும்,  நறுக்கிய காய்கறி, தக்காளி துண்டுகள் சேர்த்து சூடுபட கிளறவும். பாசுமதி அரிசியில் தயிர் விட்டு, அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு, வதக்கிய காய்கறி கலவை, போட்டு கலக்கவும். அப்படியே குக்கரில் வைத்து மூடி, 2 விசில் வந்ததும் இறக்கி... நெய் விட்டு, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கினால்... வெஜ் புலாவ் தயார்.

 கீர்

தேவையானவை: கடலை மாவு - 4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - கால் கப், மில்க்மெய்ட் - 4 டீஸ்பூன், முந்திரி அல்லது சாரைப்பருப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் நெய் விட்டு சாரைப்பருப்பு (அ) முந்திரி துண்டுகளை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் கடலை மாவை வாசனை வரும் வரை வறுத்து பால் விட்டு கொதிக்கவிடவும். பிறகு சர்க்கரை சேர்த்து, மில்க்மெய்ட் விட்டு கலக்கவும். சர்க்கரை   கரைந்து கொதிக்கும்போது... ஏலக்காய்த்தூள், வறுத்த பருப்பை போட்டு கலக்கினால்... கீர் ரெடி!

குறிப்பு: இதை சூடாகவோ, குளிர வைத்தோ கொடுக்கலாம்.

 ரஸ்க் ஐஸ்க்ரீம்

தேவையானவை: ரஸ்க் தூள் - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், மில்க்மெய்ட் - 4 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - 4 துளிகள், சர்க்கரை - கால் கப்.

செய்முறை: பாலுடன் சர்க்கரையை சேர்த்து, மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறுகும் வரை காய்ச்சவும். ரஸ்க் தூளில் காய்ச்சிய பாலை சிறிதளவு சேர்த்து, மிக்ஸியில் 5 நிமிடம் சுற்றவும். மில்க்மெய்ட் விட்டு கலந்து, எசென்ஸ் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் மிக்ஸியை ஓட விட்டு எடுக்கவும். இந்தக் கலவையை மீதமுள்ள பாலில் சேர்த்துக் கலக்கி, அலுமினியம் கப் அல்லது சின்ன கிண்ணத்தில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் ஃப்ரீசர் பகுதியில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து, பரிமாறவும்.

 திடீர் போண்டா

தேவையானவை: இட்லி மாவு - ஒரு கப், கடலை மாவு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிதளவு, கேரட் - வெங்காயம் (துருவியது) - 4 டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை விட்டு... கடலை மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி - பச்சைமிளகாய் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை. கேரட் - வெங்காய துருவல், உப்பு சேர்த்து  நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, இட்லி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டினாற் போல போடவும். வெந்து மேல் வரும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எண்ணெயை வடித்து அரித்து எடுக்கவும்.

குறிப்பு: சட்னி, தக்காளி சாஸ் இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

 மசாலா டீ

தேவையானவை: பால், டீத்தூள், சர்க்கரை - தேவையான அளவு. மசாலா பொடிக்கு: சுக்கு - 4 , கிராம்பு - 4, ஏலக்காய் - 4, பட்டை - 1, ஜாதிக்காய் -  மிளகு அளவு.

செய்முறை: மசாலா பொடிக்கு தேவையான பொருட்களை வெறும் கடாயில் வறுத்து, பொடி செய்து சலித்து, டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான பால், தண்ணீர் கலந்து அடுப்பில் வைக்கவும். சூடாகி வரும் சமயம் டீத்தூள், சிறிதளவு மசாலா பொடி போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வந்ததும் வடிகட்டி சர்க்கரை சேர்த்துப் பருகவும்.

 கொய்யாப்பழ ஜூஸ்

தேவையானவை: கொய் யாப்பழம் - 2, எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், தண்ணீர் - 2 கிளாஸ், மிளகுத்தூள்,  உப்பு  - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: கொய்யாப் பழத்தை 'கட்' செய்து விதை நீக்கி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, கண்ணாடி கிளாஸில் ஊற்றி, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

 கேபேஜ்  பனீர் ரோல்ஸ்

தேவையானவை: துருவிய கேபேஜ் (கோஸ்) - ஒரு கப், உருளைக்கிழங்கு - ஒன்று (வேக வைத்து மசிக்கவும்), பனீர் (துருவியது) - அரை கப், கொத்தமல்லி இலை - சிறிதளவு, இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், பிரெட் தூள் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் துருவிய கேபேஜ், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும். கலவையில் சிறிதளவு எடுத்து நீளவாட்டில் உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உருட்டிய கலவையை பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.  

குறிப்பு: இதற்கு டொமேடோ சாஸ் தொட்டு சாப்பிடலாம்.

 முருங்கைக்காய் கீர்

தேவையானவை: முருங்கைக்காய் - 4, சர்க்கரை - கால் கப், பால் - 500 மில்லி, மில்க்மெய்ட் - 4 டீஸ்பூன், குங்குமப்பூ - 5, 6 இழைகள்

செய்முறை: முருங்கைக்காயை வேக வைத்து உள்ளிருக்கும் சதைப்பற்றை நார் இல்லாமல் எடுக்கவும். பாலை நன்றாகக் காய்ச்சி... சர்க்கரை, முருங்கைக்காய் விழுது, மில்க்மெய்ட் சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும். குங்குமப்பூ  சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இது, சுவையுடன் சத்தும் மிக்கது. ரோஸ் எசென்ஸ் விட்டு கலந்து பருகினால், ரோஸ் மில்க் போல இருக்கும்.

 அவல் பகளாபாத்

தேவையானவை: அவல் - ஒரு கப், தயிர் - ஒரு கப்,  கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை - தலா 10, மாதுளம் முத்துக்கள் - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் -  ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அவலை போட்டு தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும். தயிர், உப்பு, கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, மாதுளம் முத்துக்களை சேர்த்து, அப்படியே பிசிறிய அவலில் கொட்டி கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், கிள்ளிய கறிவேப்பிலை  தாளித்து, அவல் கலவையில் சேர்த்துக் கலக்கினால்... அவல் பகளாபாத் ரெடி!

Tamilnadu Government announced that a new 600 MW coal fired electricity generation station would come up at the site of the Ennore Thermal Power Station, in North Chennai, by 2015.

Proposed by the Tamilnadu Governmen The high tech power plant, to be built at a cost of INR 3,600 crore, would pave the way for the retirement of the old 450 MW ETPS.


ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக சசிகலா மற்றும் அவரை சுற்றியுள்ள குடும்பத்தினர் கையில் இருந்த அ.தி.மு.க.,வில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. சசி இல்லாமல் அவர் இல்லை என்ற நிலையை தகர்த்து எறிந்திருக்கிறார் ஜெ., .

சமீப காலமாக ஜெ மற்றும் சசி குடும்பத்தினர் இடையே அரசல் புரசலாக புகைச்சல் இருந்து வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கட்சியின் பொது செயலர் ஜெ., இன்று அ.தி.மு.,கவில் இருந்து மொத்தம் 12 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார். இன்று ஜெ., வெளியிட்டுள்ள அறிவிப்பில் : சசிகலா. நடராஜன், தினகரன், சுதாகரன், திவாகர்(மன்னார்குடி),பாஸ்கரன்,ராமசந்திரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன், ராவணன், மோகன் உள்ளிட்ட 12 பேரும் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த 12 பேருடன் கட்சிக்காரர்கள் யாரும் இனி எவ்வித தொடர்பும் கொள்ள கூடாது என்று கடும் எச்சரிப்பும் வெளியிட்டுள்ளார். 12 பேரும் சசியின் நெருங்கிய வட்டாரம் ஆகும்.

கடந்த 25 ஆண்டு கால வரலாற்றில் சசி குடும்பத்தினரும் அவருக்கு வேண்டப்பட்டவர்களும் கட்சியில் கோலோச்சி வந்திருந்தனர். கட்சியிலும் , ஆட்சிக்கு வந்தால் அரசிலும் இவர்கள் தலையீடு இல்லாமல் இருக்காது. அரசு துறை பொறுப்புகள் டிரான்ஸ்பர் மற்றும் கட்சியில் பதவி வேண்டுமானால் சசி வட்டராத்தையே நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க., தொண்டர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த கூட்டத்தினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அ.தி.மு.க, தொண்டர்கள் இடையே பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது. ஜெ.,யின் அதிரடி நடவடிக்கையால் சசி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அ.தி.மு.க.,வை கைப்பற்ற திட்டம் - சசி நீக்கம் குறித்து பரபரப்பு தகவல்: சசியை கட்சியில் இருந்து நீக்க ஜெ., எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பல பின்னணி தகவல்கள் இருந்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு: சசிகலா மற்றும் அவரது வட்டாரத்தினர் கட்சியை தங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். அதாவது பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஜெ.,வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இதில் அவருக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அவர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டால் அந்நேரத்தில் என்ன செய்வது என பெரும் ஆலோசனை நடத்தியது சசி கூட்டம். இதன் ஒரு கட்டமாக நடராஜன் அ.தி.மு,.க.,வை தங்கள் வசம் கொண்டு வர தங்களுக்கு வேண்டிய கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசில் அதிகாரிகள் என பலரை தங்கள் இஷ்டம் போல் பொறுப்பில் கொண்டு வரதிட்டமிட்டார். இதற்கு சசியும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் இந்த உள்ளடி வேலை நடந்த போது தொலைபேசி உரையாடல் தமிழக உளவுத்துறைக்கு கிடைத்தது. இந்த தகவலை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட ஜெ., இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவல் தெரிவிக்கின்றன.கட்சியில் இருந்து நீக்கப்படவிருக்கிறோம் என தெரிந்த சசிகலா 2 ஸ்கார்பியோ வேனில் மூட்டை முடிச்சுகளுடன் மாற்று இடம் தேடி கிளம்பினார் .

More Tamilnadu News here.
Romance Ragasiyangal
காதல் காதல்தான் ரொமான்ஸ் ரகசியங்கள்:

சில ஆண்டுகளுக்கு முன் அதிர்ச்சியான ஒரு சம்பவத்தை சந்திக்க நேர்ந்தது. சண்முகம், 17 வயது இளைஞன். வேலூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து, அம்மாவுடன் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்திருந்தான். சிறிய ஓட்டு வீட்டில் தங்கியிருந்தார்கள். சண்முகம் வேலை தேடிக் கொண்டிருக்க... அக்கம்பக்க வீடுகளில் பாத்திரம் தேய்த்து சொற்பப் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார் அம்மா. அவ்வப்போது சண்முகத்துக்கு சிறு சிறு வேலைகள் கொடுத்து, கொஞ்சம் பணமும் கொடுப்பது என் வழக்கம். அம்மாவின் கனவெல்லாம், சண்முகம் தலையெடுத்து குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்பதுதான்.

அவர்களுக்குப் பக்கத்து வீட்டிலேயே அக்காவுடன் தங்கியிருந்தாள் அர்ச்சனா. சினிமாவில் 'ரிச் கேர்ள்ஸ்’ என்று சொல்வார்கள். பின்னணியில் நடமாடும் துணை நடிகைகள். அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாள் அர்ச்சனா. சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியில் உடைகள், செருப்புகள், மேக்கப் சாமான்களை வாங்கிவிடுவாள். அவளுடைய வேலைக்கு அது தேவையாக இருந்தது என்பது வேறு விஷயம்.

சண்முகத்துக்கும் அவளுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாத வகையிலான சுத்தமான நட்புதான். சண்முகம் அவளை ஆராதித்தான். 'உலகத்தில் எனக்கு இருக்கும் ஒரே ஃப்ரெண்ட்’ என்பான். அடிக்கடி அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பான். அர்ச்சனாவும் அவனிடம் விகல்பம் இல்லாமல் பழகினாள். 'ஏதாவது விபரீதத்தில் முடியுமோ?' என்கிற பயம் சண்முகத்தின் அம்மாவிடம் இருந்தது.

ஒருநாள் திடீரென்று சண்முகம் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டான். எங்கள் எல்லோருக்கும் பேரதிர்ச்சி. 'எனக்கும் அர்ச்சனாவுக்கும் இருந்த புனிதமான நட்பை உலகம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் சாவதன் மூலம் அந்த புனிதத்தன்மையை இந்த உலகத்துக்கு உணர்த்துகிறேன். அர்ச்சனா நல்ல வாழ்க்கை வாழ என் வாழ்த்துக்கள்!’ என்றது அவன் எழுதி வைத்திருந்த கடிதம்.

அர்ச்சனாவிடம் பிறகு பேசியபோது, சண்முகத்தை அவளுடைய அக்கா சந்தேகப் பட்டதாகவும், தன் தங்கையை அவன் திட்ட மிட்டு கவர முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய தாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் சொன்னாள்.

'நட்பு’ என்கிற விஷயத்தை அவன் குழப்பிக் கொண்டிருக்கிறான். சரியான கவுன்சிலிங், சரியான நேரத்தில் கிடைத்திருந்தால், அப்படிச் செய்திருக்கமாட்டான் என்று நினைத்தேன். அவன் உள்மனதில் அர்ச்சனாவின் மேல் காதல்கூட இருந்திருக்கலாம். ஆனால், அவனுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தேவைப்பட்டிருக்கிறது. நட்பு என்று பெயரிட்டு அதை அணிந்திருக்கிறான். அதற்குக் காரணம் அர்ச்சனாவிடம் அவனுக்கு இருந்த காம்ப்ளக்ஸ். அவள் நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே அவனை மிகக் கவர்ந்திருந்தாலும், அவளுடன் பழகுவதற்கான அங்கீகாரமாக நட்புதான் அவனுக்குப் பயன்பட்டிருக்கிறது. அந்த கவசம் உடைந்து போனதில் அப்செட் ஆனவன்... தற்கொலையை நாடியிருக்கிறான்.

பால்ய பருவத்திலிருந்து வாலிப பருவத்துக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும் இளம் உள்ளங்கள் நட்பு, காதல் இவை பற்றிய தெளிவான புரிதல்களை அடைய வேண்டும். அதுவும் இளம் பருவத்துக் காதல் என்பது மிகவும் அபாயகரமானது. தமிழ் சினிமாவில் சர்வ சாதாரணமாக சிறு வயதில் ஏற்படும் காதலைப் பெருமைப்படுத்திக் காண்பிக்கிறார்கள். அந்த வயதில் ஏற்படும் உணர்வு என்பது வெறும் நட்புதான்... காதல் அல்ல. இருபால் கவர்ச்சி என்பது அதில் இலைமறை காயாக இருக்கலாம். அதுவே எல்லாமும் கிடையாது.

நிறையபேர் 'புனிதம்’ என்ற சொல்லை வைத்துக்கொண்டு, வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். உலகில் எல்லாமே இயல்பானதுதான். புனிதம் என்பதெல்லாம் அதீதமான வார்த்தை. பரத் - நித்யா இருவரையும் பற்றி தெரிந்து கொண்டால்... நான் சொல்வதில்இருக்கும் உண்மை உங்களுக்கே புரியும்!

Read more Romance Ragasiyangal articles from the given links
Sorry, I could not read the content fromt this page.Sorry, I could not read the content fromt this page.

View the original article here

Sorry, I could not read the content fromt this page.Sorry, I could not read the content fromt this page.

View the original article here

Sorry, I could not read the content fromt this page.Sorry, I could not read the content fromt this page.

View the original article here

Sorry, I could not read the content fromt this page.Sorry, I could not read the content fromt this page.

View the original article here

Sorry, I could not read the content fromt this page.Sorry, I could not read the content fromt this page.

View the original article here

?????? : ?????? ?????? ?????? ??? ?????? ????????? 168 ?????? ??? ??????????, 16 ???????? 192 ????????????, ??? ?????? 2,024 ???????????? ????????????. ????? ??? ???????, ????????? 3,808 ?????? ???????????????.??????? ????? ?????, ????? ??????? ???? ?????????? ?????????? ???? ??????? ??????????? ????????? ???????????? ?????????????. ???? ???????, "????????" ????????? ?????? ???? ????????? ????? ????????. ??????, ??????? ??????? ??????? ?????? ???????? ????? ??????? ???????? ?????????. ?????? ?????? ????? ??? ????????? ???? ?????? ?????????, ????????? ??????????. ????? ?????? 19?? ???? ????? 15 ???????? 264 ????????????, ??? ?????? 1,908 ???????????? ????????????. ????? 15?? ???? ????? 15 ???????? 928 ????????????, ??? ?????? 1,991 ???????????? ??????? ?????????????. ?????? ????????? ????? 16 ???????? 24 ????????????, ??? ?????? 2,003 ???????????? ????????????. ?????? ???? ??????????, ????????? 152 ?????? ??? ??????????, 16 ???????? 176 ????????????, ??? ?????? 2,022 ???????????? ??????? ?????????????. ???????? ????????? ?????? 16 ?????? ??????????, 16 ???????? 192 ????????????, ??? ?????? 2,024 ???????????? ????????????. ?????? ??? ?????? ????????? 168 ?????? ??? ???????????. ????? 2010?? ????? ?????? 19?? ???? ????? 12 ???????? 384 ????????????, ??? ?????? 1,548 ???????????? ?????? ??????? ?????????????. ????? ????????? ????????? 3,808 ?????? ??? ???????????????. ????? ????? 19?? ???? ????? 15 ???????? 264 ????????????, ??? ?????? 1,908 ???????????? ????????????. ????? ??? ????????? ????????? 928 ?????? ??? ??????????????? ?????????????????. ??? ???????? ????? ???? ??? ??????????? ??????????, "????? ??????? ???? ?????????? ????????????? ?????? ??????? ?????????. ????????????, ????? ??????? ?????????? ??????? ????? ???????????? ?????????? ???? ??????? ??????? ??????? ???????????????. ??????, ?????????? ???? ?????????? ????????. ???? ??????? ???? ????? ????????. ??????? ??? ????????? ?????? ??????????? ??????' ???????.


?????? ??????? ????????? ?????????:

View the original article here

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Sorry, I could not read the content fromt this page.

View the original article here

Sorry, I could not read the content fromt this page.Sorry, I could not read the content fromt this page.

View the original article here