Powered by Blogger.

"பனங்கற்கண்டு தேங்காய் சுசியம்' | தமிழ் சமையல்

பனங்கற்கண்டு தேங்காய் சுசியம் செய்ய தேவையானவை :

இட்லி மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு கரண்டி அளவு
சோடா உப்பு - இரண்டு சிட்டிகை
பனங்கற்கண்டு - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கப்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
முந்திரிபருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
பிஸ்தா - ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
உடைத்த கடலை - கால் கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு
இளமஞ்சள் நிற உணவுக்கான பொடி - சிறிதளவு

பனங்கற்கண்டு தேங்காய் சுசியம் செய்முறை:

இட்லி மாவு, மைதா, சோடா உப்பை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும். வாணலியில் நெய் ஊற்றி தேங்காய் துருவல், முந்திரி பருப்பு, பிஸ்தா, ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.இதனுடன் உடைத்த கடலை மாவை சேர்த்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட வேண்டும். கரைத்து வைத்த மாவில் உருண்டைகளை நனைத்தெடுத்து, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். தீயை மிதமாக வைத்தால் சுவை கூடும்.

0 comments