Powered by Blogger.

சென்னா மசாலா | தமிழ் சமையல்

சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து கையால் நன்கு நசுங்கும் பதத்திற்கு வேக வைப்பது மிக மிக அவசியம். இது சென்னா எளிதில் ஜீரணமாக உதவும்.

சென்னா மசாலா தேவையான பொருட்கள்

வெள்ளைச் சென்னா - 2 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 8 டேபிள் ஸ்பூன்

வதக்கி அரைக்க

எண்ணை - 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 8 பற்கள்
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்

அலங்கரிக்க

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

சென்னா மசாலா செய்முறை

* வெள்ளைச் சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு 1 சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.

* வதக்கி அரைக்க என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை நன்கு சுருள வதக்கி, 2 டேபிள் ஸ்பூன் வேக வைத்த சென்னா சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் விழுதாக அரைக்கவும். (வேக வைத்த சென்னா 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்ப்பதானது கிரேவியை கெட்டியாக்குவதுடன் சுவையை அதிகரிக்கும்.)

* அரைத்த விழுதை மேலும் சிறிது எண்ணையில் நன்கு வதக்கி, வேக வைத்த சென்னா, உப்பு, வேக வைத்த சென்னாவில் இருந்த தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டதும் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

சுவைக்கான குறிப்பு

* தேவையானால் வேக வைத்த உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி கடைசியில் சேர்த்து ஒரு கொதி விடலாம். சுவை பிடித்தோர் உண்பதற்கு முன்பு சென்னாவில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து உண்ணலாம்.

1 comment:

  1. நான் சமையல் குறிப்புகளுக்காக பயன்படுத்தும் இணையதளங்களுள் இந்த இணையதளமும் ஒன்று. இதில் சமையல் குறிப்புகள் அனைத்தும் அழகாக தொகுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் பார்க்கும் மற்றொரு இணையதளத்தையும் இங்கு குறிப்பிட ஆசைபடுகிறேன். http://www.valaitamil.com/recipes

    ReplyDelete