Powered by Blogger.

Pepper Crap Soup: நண்டு மிளகு சூப்


நண்டு மிளகு சூப் தேவையான பொருட்கள்:

பெரிய நண்டு -1

மிளகு - 2 டீஸ்பூன்

சீரகத்தூள் -1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

இஞ்சி -சிறுதுண்டு

எண்ணெய் -1 டீஸ்பூன்

பிரியாணி இலை -1

எலுமிச்சம்பழச்சாறு - 1 டீஸ்பூன்

லவங்கம் -1

கறிவேப்பிலை -சிறிதளவு

உப்பு -தேவைக்கேற்ப

நண்டு மிளகு சூப்

மிளகை தூளாக்கி சீரகத்தூளுடன் சேர்க்கவும். இஞ்சியை விழுதாக்கவும். இவற்றுடன் சிறிது உப்புசேர்த்து சுத்தம் செய்த நண்டில் தடவி, 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், லவங்கம், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

மசால் தடவிய நண்டை சேர்த்து நன்கு வதக்கவும். போதுமான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இதன் பிறகு எலுமிச்சம்பழச் சாறை சேர்த்து உப்பு சரிபார்த்து நண்டு மிளகு சூப் சூடாக பரிமாறவும்.

0 comments