அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி: ம.தி.மு.க.,வுக்கு 13 தொகுதி
ம.தி.மு.க.,வுக்கு 13 தொகுதிகளும் , ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கி தரப்படும் என அ..தி.மு.க., தரப்பில் வைகோவிடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ம.தி.மு.க., உயர்நிலைக்கூட்டத்தில் பேசி விவாதிக்கப்படும் . இதனை தொடர்ந்து மாலையில் மாவட்ட செய்லாளர்களிடம் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க, தலைமையிலான கூட்டணியில் கசப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று அவசர, அவசரமாக , கூட்டணி கட்சி தலைவர்களை ஜெ., சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பில் பார்வர்டுபிளாக் கட்சி, மனிதயேமக்கள் கட்சி, புதிய தமிழகம், இ.கம்யூ., மார்க்., கம்யூ என அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் ,சமத்துவ மக்கள் கட்சி, என அனைத்து கட்சிகளுக்கும் கேட்டபடி தொகுதிகளை ஒதுக்குவதாக ஜெ., சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமும் முடிவு செய்யப்பட்டடது. ஆனால் தே.மு.தி.க., நிர்வாகிகள் நடத்திய சந்திப்பில் எவ்வித முடிவும் ஏற்படவில்லை. நள்ளிரவு வரை பேச்சு வார்த்தை நீடித்தது. இன்றும் தொடரும் என்று தே.மு.தி.க., அவைத்தலைவர் பன்ருட்டி அறிவித்துள்ளார்.
ம.தி.மு.க., உயர்நிலை கூட்டம் : இதற்கிடையில் நீண்ட கால நண்பராக இருக்கும் ம.தி.மு.க.,வை மதிக்கவில்லை, இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் ஜெ., சுணக்கம் காட்டுகிறார் என்றும் இது தொடர்பாக ம.தி.மு.க., உயர்நிலை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ம.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று காலை தாயகத்தில் உயர்நிலை கூட்டம் கூடி விவாதித்து வருகின்றனர்.மாலையில் மாவட்ட செயலர்களுடன் வைகோ கலந்து பேசுகிறார். எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து முக்கிய முடிவுகள் செய்யப்படும் கூட்டமாக இது இருக்கும்.
இதற்கிடையில் அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் அவசரமாக வைகோவை சந்தித்து பேசினர். இந்த பேச்சில் 13 தொகுதிகளும் வரும் காலத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் தருவோம் என்று தெரிவித்தனர். ஆனால் வைகோ 16 சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு தருமாறு கேட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து இது குறித்த விவரத்தை ஜெ,. யிடம் எடுத்து சொல்ல அ.தி.மு.க,. நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்றனர்.
அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு குறித்து உயர்நிலைக்கூட்டத்திலும், மாவட்ட செயலாளர்களுடனும், வைகோ கலந்து ஆலோசிக்கிறார். பின்னர் வைகோ போயஸ்கார்டனுக்கு சென்று தொகுதிகள் குறித்து சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments