Powered by Blogger.

D.M.D.K Announces Voters List for 2011 Elections In Tamilnadu | தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர்கள் யார், யார் என்ற விவரம் இன்று இறுதி செய்யப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று காலை கூடியது. மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வை வீழ்த்த ஒரணியில் திரண்ட அ.தி.மு.க., தலைமையில் கூட்டணியில் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் நண்பர்களாக இருந்தாலும், இவர்களுக்குள் போட்டியும் ஒரு பக்கம் பலமாக இருந்து வந்துள்ளது என்பதை உணர முடிகிறது.

இதன் காரணமாக சற்று மனக்சப்பு உருவானது. மேலும் 160 தொகுதிகளில் தான் போட்டியிடுவதன் மூலம் எங்களுக்கு பெரும்பான்மை கிட்டும் வகையில் வெற்றி பெறமுடியும் என்பதில் அ.தி.மு.க., விடாப்பிடியாகவே இருந்தது. இதன் வெளி ரூபம் தான் கூட்டணி கட்சிகளுக்கு ஓதுக்கும் முன்பாக 160 வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டது. இதனையடுத்து இந்த கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் அதிர்ச்சியில் ஜப்பான் பூகம்பத்தை விட ஆடிப்போயின.

இந்த அறிவிப்பிற்கு பின்னர் இடதுசாரிகள், தே.மு.தி.க., பார்வர்டு பிளாக்கட்சி, அகிலஇந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், ஆகியன தனித்தனியாக ஆலோசனை நடத்தின. இதனால் அ.தி.மு.க., கூட்டணி உடைந்து 3 வது அணி உருவாகுமோ என்ற நிலைமை உணர்ந்த ஜெ., முதன் முதலாக துவக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சமரச பேச்சு நடத்தினார். இந்த தருணத்திலும் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

ஒரளவுக்கு சமரசம் ஏற்பட்டு கேட்ட தொகுதிகள் மார்க்கம்யூ., 12, இந்திய கம்யூ., 10, சமத்துவமக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 1, அகில இந்திய மூவேந்தேர் முன்னேற்ற கழகம் ஓதுக்கப்பட்டன. ஆனால் தே.மு.தி.க., வுடனான 41 தொகுதிகள் எவை, எவை என்ற பேச்சு 2 நாட்களாக நள்ளிரவு வரை நீடித்தது.

பேச்சுவார்த்தை முடித்து வெளியேவந்த தே.மு.தி.க., அவைத்தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன், " தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு விட்டன. இருப்பினும் கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டு அவர் ஒப்புதல் பெறப்பட்டு அறிவிக்கப்படும் " என்றார்.

மாவட்ட செயலர்களுடன் விஜயகாந்த் இன்று காலையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். அ.தி.முக., ஒதுக்கியிருக்கும் தொகுதிகள் குறித்து நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தார். இதனையடுத்து நிர்வாகிகள் ஒப்புதல் தெரிவித்தனர்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் விவரம் வருமாறு:

1. விருத்தாசலம்
2. திருக்கோயிலூர் ,
3. ரிஷிவந்தியம்
4. திருச்செங்கோடு
5. ஆரணி
6. செங்கம் (தனி)
7. பட்டுக்கோட்டை
8. கும்மிடிபூண்டி
9. திருத்தணி
10. சோளிங்கர்
11. தருமபுரி
12. கங்கவல்லி (தனி)
13. மதுரை மையம்
14. கூடலூர் (தனி)
15. திருவாடானை )
16. திட்டக்குடி (தனி)
17. குன்னம்
18. மயிலாடுதுறை
19. திருவெறும்பூர்
20. சேலம் (வடக்கு)
21. ராதாபுரம்
22. சூலூர்
23. விருகம்பாக்கம்
24. ஒசூர்
25. லால்குடி
26. பேராவூரணி
27. செங்கல்பட்டு
28. எழும்பூர் (தனி)
29. செஞ்சி
30.ஈரோடு (கிழக்கு)
31. கம்பம்
32. சேந்தமங்கலம்
33. திருப்பரங்குன்றம்
34. விருதுநகர்
35. ஆத்தூர்
36. பண்ருட்டி
37. அணைக்கட்டு
38. பத்மநாபபுரம்
39. வேப்பனஹள்ளி
40. மேட்டூர்
41. ஆலந்தூர் ஆகிய 41 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்று ஒப்பந்தம் ஆனது. இதன்படி பொதுசெயலர் ஜெயலலிதா ஒப்புதலின்படி இந்த தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தலைமைகழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேட்பாளர் பட்டியல் :தே.மு.தி.க., போட்டியிடும் தனது முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதன்படி

மதுரை (மத்தி) - ஆர். சுந்தர்ராஜன்
கம்பம்-முருகேசன்
விருதுநகர்- பாண்டியராஜன்
பட்டுக்கோட்டை-செந்தில்குமார்
கூடலூர்-எஸ். செல்வராஜ்
ஈரோடு கிழக்கு-சந்திரகுமார்
ராதாபுரம்- மைக்கேல் ராயப்பன்
சேந்தமங்கலம்- சாந்தி ராஜமாணிக்கம்
சேலம் வடக்கு- மோகன்ராஜ்
திருக்கோவிலூர்- எல்.வெங்கடேசன்
ஆத்தூர்- எஸ் ஆர் கே பாலசுப்ரமணியன்
ஆரணி-மோகன்
கெங்கவல்லி-சுபா
பேராவூரணி-அருண்பாண்டியன்
சோளிங்கர்-பி.ஆர் மனோகர்
திருவாடனை-முஜிபுர் ரஹ்மான்
லால்குடி-செந்தூரேஸ்வரன்
திருப்பரங்குன்றம்-ஏ கே டி ராஜா
அணைக்கட்டு- வி.பி.வேலு
திருவறும்பூர்-எஸ்.செந்தில்குமார்
வேப்பனஹல்லி-எஸ் எம் முருகேசன்
ஓசூர்-ஜான்சன்
செஞ்சி-சிவா
மயிலாடுதுறை-பால அருட்செல்வன்
செங்கலபட்டு-டி முருகேசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments