Powered by Blogger.

அரைக்கீரை கொத்துக்கறி தொக்கு | தமிழ் சமையல்


அரைக்கீரை கொத்துக்கறி தொக்கு , தேவையான பொருட்கள்
மட்டன் (கொத்துக்கறி) - அரை கிலோ
அரைக்கீரை - ஒரு கட்டு
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
லவங்கம் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி

அரைக்கீரை கொத்துக்கறி தொக்கு செய்முறை


* கீமாவை (கொத்துக்கறி) சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும்.
* கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் லவங்கம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* வெங்காயம், தக்காளி இவற்றை வதக்கவும். தட்டிய இஞ்சி, பூண்டு சேர்க்கவும், கீரையைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
* கீமாவைச் சேர்த்து வதக்கி, போதுமான அளவு உப்பு சேர்க்கவும்.
* இப்போது மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
* கீரை, மசாலா வெந்து பச்சை வாசனை போய் மட்டனுடன் சேர்ந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கிவிடவும்.


To know more about the latest advertisement of surya and jyotika please visit our other blog post

0 comments