Powered by Blogger.

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா திடீர் நீக்கம்

ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக சசிகலா மற்றும் அவரை சுற்றியுள்ள குடும்பத்தினர் கையில் இருந்த அ.தி.மு.க.,வில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. சசி இல்லாமல் அவர் இல்லை என்ற நிலையை தகர்த்து எறிந்திருக்கிறார் ஜெ., .

சமீப காலமாக ஜெ மற்றும் சசி குடும்பத்தினர் இடையே அரசல் புரசலாக புகைச்சல் இருந்து வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கட்சியின் பொது செயலர் ஜெ., இன்று அ.தி.மு.,கவில் இருந்து மொத்தம் 12 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார். இன்று ஜெ., வெளியிட்டுள்ள அறிவிப்பில் : சசிகலா. நடராஜன், தினகரன், சுதாகரன், திவாகர்(மன்னார்குடி),பாஸ்கரன்,ராமசந்திரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன், ராவணன், மோகன் உள்ளிட்ட 12 பேரும் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த 12 பேருடன் கட்சிக்காரர்கள் யாரும் இனி எவ்வித தொடர்பும் கொள்ள கூடாது என்று கடும் எச்சரிப்பும் வெளியிட்டுள்ளார். 12 பேரும் சசியின் நெருங்கிய வட்டாரம் ஆகும்.

கடந்த 25 ஆண்டு கால வரலாற்றில் சசி குடும்பத்தினரும் அவருக்கு வேண்டப்பட்டவர்களும் கட்சியில் கோலோச்சி வந்திருந்தனர். கட்சியிலும் , ஆட்சிக்கு வந்தால் அரசிலும் இவர்கள் தலையீடு இல்லாமல் இருக்காது. அரசு துறை பொறுப்புகள் டிரான்ஸ்பர் மற்றும் கட்சியில் பதவி வேண்டுமானால் சசி வட்டராத்தையே நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க., தொண்டர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த கூட்டத்தினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அ.தி.மு.க, தொண்டர்கள் இடையே பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது. ஜெ.,யின் அதிரடி நடவடிக்கையால் சசி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அ.தி.மு.க.,வை கைப்பற்ற திட்டம் - சசி நீக்கம் குறித்து பரபரப்பு தகவல்: சசியை கட்சியில் இருந்து நீக்க ஜெ., எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பல பின்னணி தகவல்கள் இருந்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு: சசிகலா மற்றும் அவரது வட்டாரத்தினர் கட்சியை தங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். அதாவது பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஜெ.,வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இதில் அவருக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அவர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டால் அந்நேரத்தில் என்ன செய்வது என பெரும் ஆலோசனை நடத்தியது சசி கூட்டம். இதன் ஒரு கட்டமாக நடராஜன் அ.தி.மு,.க.,வை தங்கள் வசம் கொண்டு வர தங்களுக்கு வேண்டிய கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசில் அதிகாரிகள் என பலரை தங்கள் இஷ்டம் போல் பொறுப்பில் கொண்டு வரதிட்டமிட்டார். இதற்கு சசியும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் இந்த உள்ளடி வேலை நடந்த போது தொலைபேசி உரையாடல் தமிழக உளவுத்துறைக்கு கிடைத்தது. இந்த தகவலை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட ஜெ., இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவல் தெரிவிக்கின்றன.கட்சியில் இருந்து நீக்கப்படவிருக்கிறோம் என தெரிந்த சசிகலா 2 ஸ்கார்பியோ வேனில் மூட்டை முடிச்சுகளுடன் மாற்று இடம் தேடி கிளம்பினார் .

More Tamilnadu News here.

0 comments